தொழில்
முனைவோரின் நலத்திற்காக முக்கிய பங்கு ஆற்ற
முடியும் என மன்றம் உறுதியாக நம்புகிறது.
தொழில் முனைவோர் வெற்றியடைய வேண்டுமானால்,
அவர் சுயமாகவும் உணர்வுபூர்வமாகவும் பொருள்
நிலையிலும் உயர வேண்டும். ஆகவே, தொழிலில்
வெற்றி இரு பரிமாணங்களைக் கொண்டது. இவ்விரு
பரிமாணங்களை இரு சிறகுகள் எனலாம். முதற்சிறகு
அவரது மனஉறுதி எனில் இரண்டாம் சிறகு பொருளாதாரமாகும்.
மன்றமானது தொழில் முனைவோரின் இந்த இரு சிறகுகளையும்
நன்றாக செம்மைபடுத்தி விரிவாக்கிட முனையும்.
|